RNI.No. TNTAM / 2023 / 88613

அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடி: ‘ரியல் எஸ்டேட்’ நிறுவன இயக்குநர் கைது

சென்னை:

  • சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
  • இந்த நிலமானது அரசுக்குச் சொந்தமானது. ஆனால், அரசு நிலத்தை அரசுக்கே விற்றதாகக் கூறி, ரூ.33 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு தொகை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
  • இது தொடர்பாக, ‘அபிஷேக் ரியல் எஸ்டேட்’ நிறுவனத்தின் இயக்குநர் ஆசிஷ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இவருக்குக் கூட்டாளிகள் இருப்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
  • மோசடி விவரம்:
    • இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு சுமார் 7.5 ஏக்கர்.
    • இது தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை ஏமாற்றிப் பெறப்பட்டுள்ளது.
  • இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிஷ் ஜெயின் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 41 பேர் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
  • மோசடி செய்த ஆசிஷ் ஜெயின் மற்றும் அவரோடு தொடர்புடைய மற்றவர்களின் ஆவணங்கள் குறித்தும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *