RNI.No. TNTAM / 2023 / 88613

இயற்கை முறையில் எளிய டிப்ஸ்


கிராம்பு சமையலில் வாசனைக்காக மட்டும் பயன்படுத்தறீங்களா? அது உங்கள் ஸ்கின்னில் பல மேஜிக்குகளை செய்யும் பொருள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிராம்புவை உங்கள் ஸ்கின்னில் உள்ள பிரச்சினைக்கு ஏற்றபடி வெவ்வேறு பொருள் களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நீங்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு மாற்றங்களைச் சந்திப்பீர்கள். பெரிய சருமத் துளைகள் பிரச்சினை யால் சருமத் துளைகளுக்குள் அழுக்குள் போய் அடைத்துக் கொள்ளும். அதோடு சருமத்தில் குழி குழியாக ஆகிவிடும். இதை சரிசெய்து பெரிய சருமத் துளைகளைச் சுருக்கி சிறிதாக்கவும் ஸ்கின் டைட்டாகவும் கிராம்பை ரைஸ் வாட்டருடன் சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் அரிசி, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் கிராம்பு, ஒரு ஸ்பூன் ரோஸ்வாட்டர். ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டினால் டோனர் ரெடி. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அது அப்படியே தழும்பாக மாறிவிடும். அது அதிகரித்து ஹைபர் பிக்மண்டேஷனாக கூட மாறிவிடும். கரும்புள்ளிகளை நீக்கி க்ளியர் ஸ்கின் கிடைக்கவும் கிராம்பை பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் கிராம்புடன் ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் டோனர் ரெடி. இதை தினமும் ஸ்பிரே செய்து மசாஜ் செய்து கழுவினால் கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும். ஒரு ஸ்பூன் கிராம்பு, ஒரு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் க்ரீன் டீ ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *