
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தற்போது மாநிலம் முழுவதும் மொத்தம் 1,30,69,831 பயனாளிகள் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர். இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 16,94,339 மகளிரின் வங்கி கணக்குகளில் தலா 1,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை வரும் காலத்தில் நிச்சயம் உயர்த்தப்படும் என்றும், இது பெண்களின் பொருளாதார வலிமையை உயர்த்தும் ஒரு தார்மீக உரிமை என்றும் முதலமைச்சர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.