RNI.No. TNTAM / 2023 / 88613

குற்றவழக்குடையவர்கள் எவ்வாறு பாஸ்போர்ட் பெறுவது?

குற்றவழக்குடையவர்கள் எவ்வாறு பாஸ்போர்ட் பெறுவது?- உயர்நீதிமன்றம் விளக்கம் அனைவருக்கும் வணக்கம், ஒரு நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவன் அந்நாட்டிலிருந்து பிற குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் என்ற ஒன்று மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இத்தகைய வகையில் ஒரு நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் பல்வேறு தணிக்கைகளுக்குப் பிறகே ஒவ்வொருவருக்கும் வழங்கத் தக்கதாக உள்ளது. அதாவது அந்த நாட்டில் வாழும் ஒரு குடிமகன் எத்தகைய குற்ற நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லாத ஒருவனாக இருக்கும் பட்சத்த்தில் மட்டுமே அவன் அந்த பாஸ்போர்ட் பெற இயலும். இதற்காக ஒருவர் பாஸ்போர்ட்டிற்காக |விண்ணப்பிக்கும் பொழுது அவரின் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மை ஆராயப்படுவதுடன் அந்த நபர் குற்றப்பிண்ணனி கொண்டவரா என்பது காவல்துறை அறிக்கை மூலம் பெறப்படுகிறது. இத்தகைய வகையில் ஒருவர் குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய வகையில் வழக்கு தொடரப்பட்டவராக இருப்பின் அத்தகைய நபர்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவதோ அல்லது ஏற்கனவே அவர்களிடம் உள்ள பாஸ்போர்ட்டை புதுப்பித்தல் என்பது சாத்தியமா? என்ற வகையிலான வழக்கிற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக் குறித்து இப்பதிவில் காண உள்ளோம். வழக்கின் சாரம் தான் பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மனுச்செய்திருந்ததாகவும் ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையிலும் தனது பாஸ்போர்ட் புதுப்பிக்கபடாமல் நிலுவையில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது சம்மந்தமாக தான் குற்றவழக்கு தொடர்பானவன் என காவல்துறை தெரி வித்துள்ளதாகவும், தானும் அதற்கு அது பொய்யான வகையில் தொடுக்கப்பட்ட வழக்கு என்ற வகையில் பதில் அளித்தும் இன்னும் இதுவரை எந்தவிதப் பதிலும் இல்லை எனத்தெரிவித்து எனவே தனது பாஸ்போர்ட்டை உடனடியாக புதுப்பித்து வழங்கிட உத்தரவிடவேண்டும் என மனுச்செய்திருந்தார். இதனை விசாரித்து அறிந்த மாண்புமிகு நீதியரசர்கள் அமர்வு புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கோ அல்லது பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கோ குற்றவழக்குச் சம்மந்தப்பட்டவர் அந்த வழக்குகள் நடைபெறும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி அதற்கு உரிய வகையில் அனுமதி வழங்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருப்பதால் இத்தகைய வகையில் குற்ற வழக்கு சம்மந்தமான முகாந்திரம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களில் உரிய அனுமதி பெற்றால் மட்டுமே அவர்கள் பாஸ்போர்ட் சம்மந்தமான மனு பரிசீலிக்கப்படும் எனக்கூறி அயல்நாடுகளுக்கு செல்ல அடிப்படையாக அமையும் இந்த பாஸ்போர்ட் குற்றவாளிகளிடம் சிக்கி அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிவிடக்கூடாது என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நடைமுறையை தளர்த்த இயலாது எனக்கூறி மேற்படி நபர் உரிய நீதிமன்றத்தில் உரிய வகையில் அனுமதி பெற்றால் மட்டுமே அவரது புதுப்பித்தல் சம்மந்தமான மனு பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளனர். சட்டம் அறிவோம்! சிறப்புடன் வாழ்வோம்! M.sudharani Advocate Madurai Bench Madras High Court

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *