நன்மைகள்:
- நெல்லிக்காயில் விட்டமின் C அதிகம், இது சருமம், முடி ஆகியவற்றுக்கு நன்மை தருகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- புற்றுநோய் செல்களை அழிக்கும் இயல்பு உள்ளது.
- தினசரி உணவில் சேர்த்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் – அரை கப்
- பச்சை மிளகாய் – 4
- கொத்தமல்லி – 1 கைப்பிடி
- பூண்டு – 4 பல்
- நெல்லிக்காய் – 3
- உப்பு – தேவைக்கேற்ப
- புளி – சிறிதளவு
- எண்ணெய் – சிறிது
- கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
- சிவப்பு மிளகாய் – 2
- பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
செய்முறை:
- அரைத்தல்:
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, நெல்லிக்காய், உப்பு, புளி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- தாளிப்பு:
- கடாயில் எண்ணெய் சூடானதும், கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- சட்னி சேர்த்தல்:
- அரைத்த நெல்லிக்காய் கலவையை கடாயில் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி நன்கு பொரியவைத்து இறக்கவும்.
இவ்வாறு சுவையான புளிப்பு-இனிப்பு நெல்லிக்காய் சட்னி ரெடி