சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.
சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
வாழ்வில் செல்வம். வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.
கோவிலில் வடதுபுறம், கிழக்குப் புறம் கால் நீட்டக் கூடாது.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ் காரமும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.
கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
தெற்கு, மேற்கு நோக்கிய சந்நி திகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி வணங்கக் கூடாது.
சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.
உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.
வணங்க ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வேண்டும். மும்முறை வரவேண்டும். வலம்
அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்துபிரதட்சணம் செய்ய வேண்டும்.