
செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்த அஜய் (26) என்பவர், ரத்தினமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வரிசையில் நின்றிருந்தபோது, அங்கு போதையில் இருந்த மூன்று பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், அந்தக் கும்பல் அஜயை பீர் பாட்டிலால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளது. இதில் அவரது மண்டை உடைந்து, பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அஜய், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார், சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் அனுமந்தபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் ஸ்ரீதர் (19) ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.