
சென்னையின் வளர்ந்து வரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நெம்மேலி பகுதியில் ரூ.341 கோடி மதிப்பீட்டில் ‘மாமல்லன்’ புதிய நீர்த்தேக்கத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் நிறைவடையும் போது, தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வழிவகை ஏற்படும்.