RNI.No. TNTAM / 2023 / 88613

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பும் தமிழகம் தழுவிய அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. எனினும், தமிழக அரசு மற்றும் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேர கடையடைப்பு: மதுப்பி ரியர்கள் திண்டாட்டம் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, கடந்த வாரம் தமிழகம் முழுவதும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 70% கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சென்னையின் பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்காக மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததோடு, சில இடங்களில் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். திருநெல்வேலி: குடியிருப்புப் பகுதியில் மதுக்கடைக்கு எதிர்ப்பு திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அருகே எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் அதிகளவு பயன்படுத்தும் பாதையில் மதுக்கடை அமைவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, கிராம மக்கள் சாலை மறியல் TASMAC TASMAR WINESHO டாஸ்மாக் மதுபானக்கடை og wட்டுக்கு விட்டுக்கு உ போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர்: பெண்கள் மீது வழக்குப்பதிவு பாமக கண்டனம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிப் போராடிய பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல், போராடுபவர்களை விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது ஜனநாயகம் ஆகாது” என அவர் சாடியுள்ளார். காலி பாட்டில்கள் திட்டம்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு மதுபாட்டில்களுக்கு தலா 10 கூடுதல் விலையாகப் பெற்று, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைத்தால் அந்தப் பணத்தை வழங்கும் திட்டத்திற்கு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போதிய ஆட்கள் பலம் இல்லாத நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது கூடுதல் பணிச்சுமையை உருவாக்குவதாகக் கூறி அம்பத்தூர் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *