
வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என். நேரு மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர். சுமார் 2 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.