RNI.No. TNTAM / 2023 / 88613

நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!



ராய்ப்பூரில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது 1920 போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ண யித்த 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி மிக எளிதாக எட்டிப் பிடித்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஜோடி மைதானத்தின் நாலாபுறமும் பந்து களைச் சிதறடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்களும் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். வெறும் 15.2 ஓவர்களிலேயே 209 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது 20 என்ற கணக்கில் பலமான முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றியானது, டி20 போட்டிகளில் இந்திய அணியின் உலகக்கோப்பைக்கான தீவிரமான தயார் பலத்தையும், அவர்களது நிலையையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *