RNI.No. TNTAM / 2023 / 88613

“புதிய ஓய்வூதியத் திட்டமே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” மதுரை நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் (District News) “The New Pension Scheme is functioning excellently” (Tamil Nadu Government’s reply in Madurai court)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வர கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் நிதித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், “புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக எவ்விதமான நிதிச் சிக்கலின்றி அமல்படுத்தப்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை $54,000$ ஓய்வூதிய கணக்குகள் தொடங்கப்பட்டு $50,000$ பயனாளிகளுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள், வழக்கு விசாரணையை, டிசம்பர் 4ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *