
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லா மட்டன் – ½ கிலோ
- சோம்பு, மிளகு, சீரகம், கசகசா – தலா 1 டீஸ்பூன்
- பட்டை – 1 சிறிய துண்டு, கிராம்பு – 2
- இஞ்சி – 1 அங்குல துண்டு, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி, புதினா – தலா 1 கைப்பிடி
- முட்டை – 1 (விருப்பம்)
- மசாலா தூள்கள்: மிளகாய் தூள் (1 டீஸ்பூன்), கரம் மசாலா (½ டீஸ்பூன்), மஞ்சள் தூள் (½ டீஸ்பூன்)
- உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: “மட்டனை சுத்தம் செய்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 4-5 விசில் வரும் வரை நன்றாக வேகவிடவும். வேகியதும் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி விடவும். சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், கசகசா ஆகியவற்றை லேசாக வறுத்து ஆறவைத்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். வேகவைத்த மட்டனை மிக்சியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மட்டன், மசாலா பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மசாலா தூள்கள் மற்றும் முட்டை சேர்த்து நன்றாகப் பிசையவும். கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி, சிறிய உருண்டை அல்லது நீள வடிவமாகச் செய்து, காயும் எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.”