RNI.No. TNTAM / 2023 / 88613

மார்கழி குளிருக்கு ஏற்ற ரசம் ரெடிபண்ணலாமா?

தேவையான பொருட்கள்: அரைத்து பொடிப்பதற்கு…

  • சீரகம் 1 ஸ்பூன்
  • மிளகு 1 ஸ்பூன்
  • மல்லி 1/4 ஸ்பூன்
  • கிராம்பு 2
  • பெருங்காயம் 1/4 ஸ்பூன்

அரைப்பதற்கு:

  • சின்ன வெங்காயம் 5
  • முடக்கத்தான் இலை சிறிது
  • தூதுவளை இலை சிறிது
  • துளசி இலை 6
  • வரமிளகாய் 2
  • பூண்டு 7 பல்
  • கறிவேப்பிலை 1 கொத்து

ரசத்திற்கு:

  • புளி 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்தது)
  • உப்பு சுவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  • தக்காளி 3

தாளிப்பதற்கு:

  • நெய் 1/2 ஸ்பூன்
  • கடுகு 1/4 ஸ்பூன்
  • வெந்தயம் 1 சிட்டிகை
  • கறிவேப்பிலை 1 கொத்து
  • வரமிளகாய் 1
  • கொத்தமல்லி சிறிது

செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு நீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, மல்லி, கிராம்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக வைக்க வேண்டும். அதே ஜாரில் 5 சின்ன வெங்காயம், வரமிளகாய், தூதுவளை இலை, முடக்கத்தான் இலை மற்றும் துளசி இலைகளை சேர்த்து அரைத்து தனியாக வைத்துவிட்டு பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஊற வைத்துள்ள புளியை கைகளால் நன்கு பிசைந்து, புளி கரைசலை வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மிளகு சீரக பொடி மற்றும் 3 தக்காளியை சேர்த்து, கைகளால் நன்கு தக்காளியை பிசைந்து விட வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் அரைத்த இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்த பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கிளறி, நுரைக்கட்டி கொதிக்க தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மூலிகை ரசம் தயார். மார்கழி குளிரால் ஏற்படும் நோய்களை விரட்டி விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *