RNI.No. TNTAM / 2023 / 88613

மை லார்ட்

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் உயிருடன் இருப்பவர்களே ஆவணங்களில் ‘இறந்தவர்களாக’ மாற்றப்படும் ஒரு சாமானியனின் வலியை. ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜு முருகன் தனது கூர்மையான வசனங்களால் சமூகத்தின் அதிகார அடுக்குகளைத் தட்டி கேட்க, நாயகன் சசிகுமார் ஒரு எளிய மனிதனின் போராட்டத்தை மிக எதார்த்தமாகத் திரையில் கடத்தியிருக்கிறார். ஷான் ரோல்டனின்
ஆன்மாவைக் கரைக்கும் இசையும். வறுமையின் நிறத்தைப் பிரதிபலிக்கும் ஒளிப்பதிவும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. நீதிமன்றக் காட்சிகள் சில இடங்களில் நாடகத் தன்மையுடன் தெரிந்தாலும், ஒரு சாமானியன் சட்டத்தின் கதவுகளைத் தட்டும் போது சந்திக்கும் சவால்களை இத்திரைப்படம் நேர்மையாகப் பேசியிருக்கிறது. மொத்தத்தில், சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் இந்த ‘மை லார்ட்’. ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய ஒரு தரமான படைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *