RNI.No. TNTAM / 2023 / 88613

வண்டலூர் பூங்கா குளிர்கால முகாம்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்காக “உயிரியல் பூங்கா தூதுவர்” என்ற சிறப்பு குளிர்கால முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 21 முதல் 29-ஆம் தேதி வரை காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், சான்றிதழ், கையேடு மற்றும் பூங்காவிற்கு 10 முறை இலவசமாக வரும் அனுமதி அட்டையும் வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *