
அபி: “என்ன அண்ணாச்சி… நேத்து மதுராந்தகத்துல பிரதமர் கூட்டத்துக்குப் போயிட்டு வந்தீங்களா? இல்ல டிவிலேயே பார்த்தீங்களா பயங்கர கூட்டமாமே!
அண்ணாச்சி: ஏன் தம்பி கேக்குற… மதுராக்கம் பக்கம் நேத்து ஈ எறும்பு நுழைய முடியல. அந்த அளவுக்கு மக்கள் கடல்! பிரதமர் மோடி மேடைக்கு வந்த உடரன் செல்போன் டார்ச் லைட்டை எல்லாம் ஆப் பண்ணச் சொல்லி, எல்லாரையும் கையசைக்கச் சொன்னாரே… அதைப் பார்க்கவே ஒரு திருவிழா மாதிரி இருந்துச்சு.
அபி : “ஆனா அண்ணாச்சி, மோடி சார் ‘சிவிசி’ ஆட்ரின்மு எதையோ சொன்னாரே… எனக்கு என்னவோ நம்ம ஊர் மெடிக்கல் காலேஜ் பத்திப் பேசுறாரோன்மு ஒரு நிமிஷம் டவுட் வந்துடுச்சு!
அண்ணாச்சி : “அட போப்பா… அது ‘கரப்ஷன். மாஃபியா.
கிரைம் ஆமப்பா! அரசியல்வாதிங்க இப்படிச் சுருக்கமாப் பேசுறது இப்போ பேஷனாகிப்போச்சு. ஆனா அவர் அந்த ‘சி’யைச் சொன்னப்போ, மேடைல இருந்த மத்த கட்சித் தலைவர்கள் எல்லாம். ‘நல்லவேளை நம்ம கட்சிப் பேரு சில ஆரம்பிக்கல ன்ழு பெருமூச்சு விட்டதுதான் பெரிய காமெடி!
அபி : “ஹா… ஹா! ஆமாண்ணாச்சி. அப்புறம் நம்ம எடப்பாடியார் பேசும்போது. 210 தொகுதிகள்ல ஜெயிப்போம்ழு அடிச்சுர் சொன்னாரே… அவருக்கு என்ன அண்ணாச்சி தனி கணக்கு ஏதும் இருக்குமா?”
அண்ணாச்சி : “தம்பி, தேர்தல் வந்துட்டா எல்லாத் தலைவர்களும் கணித மேதையாகிடுவாங்க. இவரு 210பாரு. அவரு 234பாரு. கடைசில நாம ஓட்டுப் போடும்போதுதான் இவங்களோட ‘கால்குலேட்டர்’ வேலை செய்யுதா இல்ல ‘பேட்டரி’ தீர்ந்து போச்சான்மு தெரியும். ஆனா ஒண்ணு தம்பி… இவ்வளவு தலைவர்கள் ஒண்ணா நின்னதைப் பார்த்தா. இந்தத் தடவை தேர்தல் ரிசல்ட் வர்றப்போ டிவில ‘பிரேக்கிங் நியூஸ்’ போடுறவங்களுக்கே தலை சுத்தப்போகுது.
அபி : “நிஜம்தான் அண்ணாச்சி. அப்புறம் இந்த டபுள் என்ஜின் கதை என்னாச்சு? ஒரு இன்ஜின் டெல்லில. ஒரு இன்ஜின் இங்கன்மு சொல்றாங்களே… வண்டி ஸ்பீடா போகுமா?”
அண்ணாச்சி : “வண்டி ஸ்பீடா போகுதான்மு தெரியல தம்பி. ஆனா டீசல் விலை ஏறுற வேகத்தைப் பார்த்தா. நாம ரெண்டு பேரும் ‘வாக்கிங்’ போறதுதான் உடம்புக்கும் நல்லது, பர்ஸுக்கும் நல்லது! சரி வா… அந்தப் பக்கம் ஒரு மயைச் சாப்பிட்டுக்கிட்டே. மோடியின் உத்தரவாதம்ல நம்ம வீட்டு சிலிண்டர் விலை குறையுமான்டு டிஸ்கஸ் பண்ணுவோம்!
அபி : “வாங்க அண்ணாச்சி… லட்டு கிடைக்குதோ இல்லையோ. ஒரு சூடான வடையாவது கிடைக்குதான்ழு பார்ப்போம்!