RNI.No. TNTAM / 2023 / 88613

கோங்குரா சிக்கன் (ஆந்திரா ஸ்பெஷல்)

பொருட்கள்:

  • சிக்கன் – 200 கிராம்
  • கோங்குரா – கைப்பிடியளவு
  • வெங்காயம் – 1, நறுக்கியது
  • தக்காளி – 1, நறுக்கியது
  • மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  • காஷ்மீர் மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
  • சிக்கன் மசாலா – 4 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 5 பல்
  • பூண்டு – தேவையான அளவு
  • உப்பு, கருவேப்பிலை, மல்லி

செய்முறை:

  1. கோங்குராவை கழுவி சுத்தம் செய்யவும். சிக்கனுக்கு மஞ்சள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி, மல்லி இலைகளை நறுக்கி வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு வதக்கவும். பிறகு தக்காளி, உப்பும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. சிக்கனை சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும். கோங்குராவை நறுக்கி அல்லது பேஸ்ட் செய்தே பயன்படுத்தவும்.
  5. சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் கோங்குராவையும் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
  6. இறுதியில் சிறிது வெந்த கோங்குராவை அலங்கரித்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *