RNI.No. TNTAM / 2023 / 88613

ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய மகாகும்பாபிஷேகப் பெருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், ஏகனாம்பேட்டை கிராமம், ரோட்டுத் தெருவில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய மகாகும்பாபிஷேகப் பெருவிழா வரும் பிப்ரவரி 22ஆம் தேதி (மாசி 10) ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. “ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை” எனத் திருமூலர் போற்றிய முழுமுதற் கடவுளுக்கு, காஞ்சி மாநகரின் கிழக்குத் திசையில் அமைந்துள்ள எழில்மிகு ஏகனாம்பேட்டையில் புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டு, வரும் சுபதினத்தில் பஞ்சமி திதி, அஸ்வினி நட்சத்திரம் மற்றும் சித்தயோகம் கூடிய காலை
9.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் ஸ்தல பூஜா மிராசுதார் சிவஸ்ரீ P.R.சுப்ரமணிய சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ P.S. மஞ்சுநாதன் சிவாச்சாரியார் முன்னிலையில் நடைபெறும் இந்த ஆன்மீக வைபவத்தில், ஏகனாம் பேட்டை ரோட்டுத் தெரு பூர்வீக செங்குந்த ஸ்திரவாசிகள் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாகப் பக்தர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு ஸ்ரீசெல்வ விநாயகரின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
சிவராத்திரி பற்றிய அரிய தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *