RNI.No. TNTAM / 2023 / 88613

சூர்யாவின் 46

நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லூரி, சூர்யாவின் 46வது படத்தை இயக்க நாக வம்சி தயாரிக்கிறார். இந்தப் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி, “கருப்பு திரைப்படம் வெளியான பின் 3 மாதங்கள் கழித்து சூர்யா 46 திரைக்கு வரும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 நாள் படப்பிடிப்பு இருப்பதால் விரைவில் நிறைவடைகிறது” எனத் தெரி வித்துள்ளார். கருப்பு. சூர்யா 46. சூர்யா 47 ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டே ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *