குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு நூதனத் தண்டனை: அரசு மருத்துவமனையில் பணியாற்ற நீதிமன்றம் ஆணை திருப்பூர்மங்கலம் சாலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் மற்றும் ஊத்துக்குளி பகுதியில் 60 வயது முதியவரைத் தாக்கி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறுவன் ஆகிய இருவர் மீதான வழக்குகள் திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு சிறுவர்களுக்கும் வினோதமான மற்றும் சமூகப் பொறுப்பை உணர்த்தும் வகையிலான தண்டனையை வழங்கியுள்ளார். அதன்படி, இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அடுத்த 6 மாதங்களுக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு வரும் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றப் பாதையில் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் செல்லும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பெற்றுள்ளது.