டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை’ முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். உலக நாடுகளை ஒன்றிணைத்து ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க இந்தியா இந்த மாநாட்டை நடத்துகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் ஏ.ஐ. ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்து இந்த உச்சி மாநாடு விரிவாக விவாதிக்கும் என்றும். இது ஒரு பொறுப்பான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் 140 கோடி AI ARTIFICIAL மக்களின் பங்களிப்புடன், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு முதல் ஸ்டார்ட்அப் வரை ஏ.ஐ. துறையில் நமது நாடு முன்னணியில் இருப்பது பெருமைக்குரியது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.