RNI.No. TNTAM / 2023 / 88613

செட்டிபுண்ணியம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி எதிரே உள்ள செட்டிபுண்ணியம் ஊராட்சியில் முறையான பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களையோ நம்பியே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மகேந்திரா சிட்டியில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளதால் இப்பகுதியில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களுக்காக அங்குள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாலை நேரங்களில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *