செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்க பெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்க பெருமாள் கோவில், திருத்தேசி, பரனூர், விஜய்சிங்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள் குற்ற மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து 7 கி.மீ., தொலைவில் உள்ள மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும் நிலை இருந்தது. எனவே மறைமலை நகர் காவல் நிலையத்தை பிரித்து
இந்த பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் அரசியல் கட்சியின் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு புதிய காவல் நிலையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். தற்காலிகமாக காவல் நிலையம் அமைக்க திருக்கச்சூர் சாலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் புதுபிக்கப்பட்டு திறப்பு விழா சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் ரிப்பன் வெட்டி காவல் நிலையம் திறக்கப்பட்டது.