முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை தொக்கு

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – 2 கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 12, புளி – சிறு எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க, நல்லெண்ணெய் – 1/2 கப், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முதலில் நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து காய்ந்ததும், காய்ந்த மிளகாய், புளி, வெந்தயம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின் 2 கைப்பிடி கறிவேப்பிலையையும் சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வதக்க வேண்டும். ஆறிய பின் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அரைத்த கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளற வேண்டும். சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார். இதனை சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.