சென்னை:

- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை சீசனை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- வடக்கு மண்டலத்தை உள்ளடக்கிய வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு நேரடிப் பயணிகள் சிறப்புப் பேருந்து சேவை முதன்முறையாக விரிவுபடுத்துகிறது.
- இந்தப் பேருந்துகள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலமான நவம்பர் 28, 2025 முதல் ஜனவரி 16, 2026 வரை இயக்கப்படும்.
- கோவில் நடை சாத்தப்படும் நாட்களான டிசம்பர் 27 முதல் 30 வரை மட்டும் பேருந்துகள் இயக்கம் இருக்காது. அதன் பிறகு சேவைகள் மீண்டும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்துப் பேருந்துகளிலும் GPS கண்காணிப்பு வசதி, அவசர உதவிக்கான வசதிகளும் உறுதி செய்யப்பட்டப் பாதுகாப்புப் பெட்டகமும் உள்ளது.
- பயணச்சீட்டுகளைப் பயணிகள் www.tnstc.in என்ற SETCயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.