RNI.No. TNTAM / 2023 / 88613

ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது; விஜய் அறிவுரை

நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை எனில் அவர்களின் வாக்குரிமை உறுதியாக, நம் கழக தோழர்கள் விரைந்து உதவிட வேண்டும். புதிய வாக்காளர்களில் ஒருவர் கூட விடுபடாமல் பார்த்து பார்த்து சேர்க்க வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கிய பொக்கிஷம். செயல்மொழியே நமது அரசியலுக்கான தாய்மொழி. அதை மனதில் கொண்டு, தொடர்ந்து களமாடுங்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *