
“புதுக்கோட்டை: தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இந்த ஆண்டிற்கான கணக்கை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று கோலாகலமாகத் தொடங்கின. மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின், வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசுகள், பீரோ, கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. சுமார் 600 காளைகள் பங்கேற்ற இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.”