RNI.No. TNTAM / 2023 / 88613

தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு சுகாதாரத்துறை எச்சரிக்கை!


சென்னை, விழுப்புரம், தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சிக்குன்குனியா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநில பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் இந்த தீவிர காய்ச்சல், தலைவலி, தசை வலியுடன் குறிப்பாக எலும்பு மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படுவதால், மிகுந்த பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த நோய், தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரத்தியேக வார்டுகளை அமைக்கவும், எலிசா பரிசோதனைக் கருவிகளைப் போதிய அளவில் இருப்பு வைக்கவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தினந்தோறும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், தேங்கியுள்ள தேவையற்ற தண்ணீரை அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *