RNI.No. TNTAM / 2023 / 88613

சட்டசபையை அவமதிக்கும் ஆளுநர்: உரையுடன் கூட்டத்தைத் தொடங்கும் நடைமுறையை நீக்கத் தீர்மானம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் சட்டசபையைத் தொடர்ந்து அவமதித்து வருவதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இனி வரும் காலங்களில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை நீக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக ஆளுநர்களும் இதேபோலச் செயல்படுவதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் இந்த வழக்கத்தை ஒழிக்க, ஒத்த கருத்துடைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. போராடும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *