
மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, வாடிப்பட்டி அருகே நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.