
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2025-26ம் ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் பூஜைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. கடந்த ஜனவரி 14ம் தேதி புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பந்தள ராஜ குடும்பத்தினரின் இறுதி தரிசனத்திற்குப் பின் ஜனவரி 21ம் தேதி காலை நடை அடைக்கப்பட்டது. இதையொட்டி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட திருவாபரணங்கள் சந்நிதானத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, ஜனவரி 23ம் தேதி பந்தளம் அரண்மனையைச் சென்றடைந்தன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பிப்ரவரி 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.