
சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகள் திருடப்பட்டது தொடர்பாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு தனியார் தங்கத் தகடு உற்பத்தி நிறுவனம். அதன் உரிமையாளருக்குச் சொந்தமான வேப்பேரி மற்றும் கொண்டித்தோப்பு வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர் ரசாயன முறையில் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.