
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்ச்சை வீடியோ’ விவகாரத்தில், அம்மாநிலக் காவல்துறை டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவில் உரிமைகள் அமலாக்கப் பிரிவின் டி.ஜி.பியாகப் பணியாற்றி வந்த இவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யாவின் வளர்ப்புத் தந்தையான இவர், அந்த வழக்கிலும் வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதங்களுக்கு முன்புதான் காத்திருப்போர் பட்டியலில் இருந்து மீண்டும் பணியமர்த்தப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள 3 சர்ச்சை வீடியோக்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் 4 மாதங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில், அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை கர்நாடக அரசியலிலும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.