RNI.No. TNTAM / 2023 / 88613

சக்கர வள்ளி கிழங்குகுலோப் ஜாமுன்


தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளி கிழங்கு – 1/2 கிலோ
பால் பவுடர் – 1/4 கப்
கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன்
நாட்டு சக்கரை – 1 1/2 கப்
தண்ணீர் 1 1/2 क
ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கின் முனைகளை நறுக்கி சிறு துண்டுகளாக்கி இட்லி சட்டியில் வைத்து இட்லியை வேக வைப்பது போல் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை வள்ளி கிழங்கு ஆறியதும் அதன் தோலை நீக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு புறத்தில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாட்டு சர்க்கரை தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். நன்றாக கரைந்த பிறகு அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஏலக்காய் துளை போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பால் பவுடர் மற்றும் கோதுமை மாவையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிணைந்து கொள்ளுங்கள். பிணைந்த உடனேயே இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் குலோப் ஜாமினை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு அதை கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து பொன்னிறமாகும் வரை வேகவிட வேண்டும். பொன்னிறமான பிறகு அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் ஜீராவில் போட்டு விட வேண்டும். இரண்டு மணி நேரம் குலோப்ஜாமூன் சீராவில் ஊறிய பிறகு விருப்பத்திற்கு ஏற்றவாறு பருப்பு வகைகளை தூவி சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான அதே சமயம் சத்தான குலோப் ஜாமுன் தயாராகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *