
துறையின் பெயர் : தமிழ்நாடு மருத்துவத்துறை
பதவியின் பெயர் : சிகிச்சை உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: 6: https://mrb.tn.gov.in/
அறிவிப்பு : சிகிச்சை உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026
பணியின் விவரங்கள் : பதவியின் பெயர் எண்ணிக்கை
சிகிச்சை உதவியாளர் (ஆண்) 4,சிகிச்சை உதவியாளர் (பெண்) 2, மொத்தம் 6. ஆண்களுக்கான பணி யிடங்களில் பிசி2, எம்பிசி1, பிசிஎம் 1 என நிரப்பப்படுகிறது. பெண்களுக்கான இடங்களில் பிசி 2 என நிரப்பப்படுகிறது. வயது வரம்பு 01.07.2026 தேதியின்படி, இப்பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக ஒசி பிரிவினர் 32 வயது வரையும். மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயது வரையும் தளர்வு உள்ளது. கைப்பெண்களுக்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. கல்வித்தகுதி இப்பதவிக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 2.5 வருடம் நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : தமிழ்நாடு அரசின் இப்பதவிக்கு
விண்ணப்பிக்கும் நபர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். டிப்ளமோ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்படும். டிப்ளமோவில் இருந்து 50 சதவீத மதிப்பெண்கள். 12ம் வகுப்பில் 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 10ம் வகுப்பில் 20 சதவீத மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000 முதல் அதிகபடியாக ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
முக்கிய நாட்கள் : விண்ணப்பம் தொடக்கம் 22.01.2026 விண்ணப்பிக்க கடைசி நாள் 11.02.2026 நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை ஆர்வமுள்ளவர்கள் https://mrb.
tn.gov.in/ என்ற இணையதளத்தில் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தில் குறிப்பிட்ட வகுப்பினர்களுக்கு தளர்வு உண்டு. இணையதளத்தில் அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் இடத்தில் உள்ள லிங்கை பயன்படுத்திக்கொள்ளலாம். முதலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.