தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நிர்வாக நலன் கருதி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி தாம்பரம், சங்கர் நகர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய முத்து சுப்பிரமணியம், சரவணன், வெங்கடேசன் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீலாங்கரை ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் சேலையூருக்கும், சேலையூர் ஆய்வாளர் சந்துரு கேளம்பாக்கத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சித்ரா (பல்லாவரம் மகளிர் காவல் நிலையம்), செல்வத்துறை (தாம்பரம் சட்டம் ஒழுங்கு), திருவள்ளுவர் (சங்கர் நகர் சட்டம் ஒழுங்கு) உள்ளிட்ட பலர் முக்கிய பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் தொடர்பான முழு விவரங்களையும் காவல் ஆணையர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.