RNI.No. TNTAM / 2023 / 88613

நெகிழ்ச்சியான செய்தி, மனிதாபிமானம் இன்னும் வாழ்கிறது.

சென்னை: விலைவாசி விண்ணைத் தொடும் இந்த காலத்தில், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், ‘நேர்மையே நற்பண்பு’ என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பத்மா, சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் தனது பணியைச் செய்து கொண்டிருந்த போது, குப்பைகளுக்கு இடையே ஒரு பையை கண்டார். அதனைத் திறந்து பார்த்த பத்மா அதிர்ச்சியில் உறைந்தார்; அந்நகரில் சுமார் 45 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளன. ஆனால், ஒரு கணம் கூட யோசிக்காமல், அந்த நகைகளை உடனடியாக உரிய அதிகாரிகளிடமும் காவல்துறையிடமும் ஒப்படைத்தார். விசாரணையில், ஒரு குடும்பத்தினர் தவறுதலாக நகைப் பையை குப்பையில் விட்டதாக தெரியவந்தது.

பத்மாவின் இந்த நேர்மை சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகள் குவிந்தன. இதை கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக பத்மாவை தனது இல்லத்திற்கு அழைத்து சென்றார். போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து, கையைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் பாராட்டியதோடு, மறக்க முடியாத ஒரு பரிசையும் வழங்கினார். இந்த நிகழ்வு தமிழகத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *