பள்ளி மாணவியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அண்ணன், தம்பி உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை! சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வினித் (26) என்பவர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் வகுப்பு பயின்ற 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, தனது தம்பிகளான விக்னேஷ் (24), ஆகாஷ் (23) மற்றும் நண்பர்கள் சீனிவாசன் (26), அருள்குமார் (26) ஆகியோருடன் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி தீபா அவர்கள் நேற்று அதிரடி தீர்ப்பளித்தார். அதன்படி, வினித் உட்பட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு. தலா 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.