தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் தி.மு.க. அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமை தாங்கினார். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராக கடும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.