RNI.No. TNTAM / 2023 / 88613

இளம்பெண் 2 பெண் குழந்தைகளை கொன்று தற்கொலை- ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள நேசனூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மா (28), பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2019ல் சிவசங்கர் என்பவரைக் காதல் திருமணம் செய்த நிலையில், கணவரின் பொறுப்பற்ற நடத்தையாலும் கடன் சுமையாலும் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது இரண்டு பெண் குழந்தைகளான தேஜா (6) மற்றும் லாஸ்யா (5) ஆகியோரைத் தூக்கிலிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் சிவசங்கர் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதுடன், பல இடங்களில் கடன் வாங்கியதால் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்துள்ளது; இதற்கிடையே மகளிர் குழுவில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பத்மா அவமானப்பட்டதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். உயிரிழப்பதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், “பெற்றோர் பேச்சை மீறி காதல் திருமணம் செய்பவர்களுக்கு எனது வாழ்க்கை ஒரு பாடம்” எனக் குறிப்பிட்டுத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *