RNI.No. TNTAM / 2023 / 88613

சந்திரயான் 4

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) சிறப்புத் திட்டங்கள் இயக்குநர் ப. வீரமுத்துவேல், சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சந்திரயான் 4 திட்டம் குறித்து முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரை யிறக்கி இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அதன் அடுத்த கட்டமாக நிலவிலிருந்து மண் மற்றும் தாதுப் பொருட்களை (மாதிரிகளை) பூமிக்கு எடுத்து வரும் நோக்கில் “சந்திரயான்4” திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மற்ற நாடுகளின் உதவி யின்றி, முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டே உள்நாட்டிலேயே மிகத் தீவிரமாகத் தயாராகி வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். விண்வெளி ஆய்வில் இந்தியாவின் தன்னிறைவை பறைசாற்றும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *