நல்லம்பாக்கம் ஏரியில் ஆண் பிணம் மீட்பு வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் ஏரிக்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் பிணமாகக் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாம்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார். அவர் எப்படி இங்கு வந்தார். இது தற்கொலையா அல்லது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு ஏரிக்கரையில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.