RNI.No. TNTAM / 2023 / 88613

மரணத்தை வென்ற மாமனிதர்: ஈஸ்டர் திருநாள்!

உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியப் பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றுப் பின்னணி:

புதிய ஏற்பாட்டின்படி, கி.பி. 30-ல் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், சீடர்கள் சென்று பார்த்தபோது கல்லறை காலியாக இருந்தது. இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த இந்த நிகழ்வு, அவர் ‘கடவுளின் மகன்’ என்பதை உலகிற்கு பறைசாற்றியது.

புனித வார நிகழ்வுகள்:

  • பரிசுத்த வியாழன்: இயேசு தனது சீடர்களுடன் ‘பஸ்கா’ விருந்தை பகிர்ந்துகொண்ட நாள்.
  • புனித வெள்ளி: மனிதகுலத்தின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் உயிர்நீத்த நாள்.
  • ஈஸ்டர் ஞாயிறு: மரணத்தை வென்று இயேசு உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியான நாள்.

வசந்த காலத் தொடக்கம்:

கிறிஸ்தவத்திற்கு முந்தைய ‘பகன்’ (Pagan) கலாச்சாரத்தில், வசந்த காலத்தின் துவக்கத்தை கொண்டாடும் மரபு இருந்தது. பிற்காலத்தில் இது இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைந்து ‘மறுபிறப்பின்’ அடையாளமாக ஈஸ்டர் என மாற்றம் பெற்றது.

ஈஸ்டர் முட்டைகள்:

ஈஸ்டர் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள். முட்டை என்பது ‘புதிய பிறப்பை’ குறிக்கிறது. இயேசு கல்லறையில் இருந்து வெளிவந்து புதிய வாழ்வைத் தந்ததை நினைவுபடுத்தும் விதமாக, வண்ணமயமான முட்டைகளை பரிமாறிக்கொள்வதும் விளையாட்டுகளை நடத்துவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *