இந்திய விமானப்படையின் பலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ நிறுவனத்திடமிருந்து மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 3.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான
இந்த பிரம்மாண்ட பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 18 விமானங்கள் தயார் நிலையில் பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும், மீதமுள்ள விமானங்கள் இந்தியாவிலேயே உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ‘ஆபரேஷன் சிந்துர் ஹீரோ’ நடவடிக்கையில் ரபேல் விமானங்களின் அசாத்தியத் திறனை உணர்ந்ததைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விரைவில் இந்தியா வரவுள்ள சூழலில், பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த ஒப்புதல் இந்திய வான் எல்லைப் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.