
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மேல் ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாகப் பறந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில், நடை திறக்கப்பட்டிருந்த நேரத்தில், சரணங்குத்தி மற்றும் சன்னிதானப் பகுதிகளுக்கு மேலே மிகக் குறைந்த உயரத்தில் இந்த ஹெலிகாப்டர் வட்டமடித்துள்ளது. ஆகம விதிகளின்படி கோவில் கருவறைக்கு மேல் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமீறல் குறித்து தேவசம்போர்டு மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.