RNI.No. TNTAM / 2023 / 88613

விருப்பத்திற்கு மாறாக சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க எந்த நீதிமன்றமும் வற்புறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லியில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் 7 மாத கர்ப்பமடைந்த நிலையில், அந்த கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு பெண்ணின் உடல் சார்ந்த முடிவெடுக்கும் உரிமை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள தனிநபர் சுதந்திரத்தின் அடிப்படை அம்சம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒரு பெண் தன் விருப்பத்திற்கு மாறாகக் கருவைச் சுமக்கவோ அல்லது கலைக்கவோ எந்த நீதிமன்றமும் கட்டாயப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கருவைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 7 மாத கர்ப்பத்தைக் கலைக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை ரத்து செய்ததோடு, அந்தப் பெண்ணிற்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *